/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லுார் கோவில் வளாகத்தில் தரைத்தளம் அமைக்க பூஜை
/
நல்லுார் கோவில் வளாகத்தில் தரைத்தளம் அமைக்க பூஜை
ADDED : டிச 25, 2024 07:24 AM

திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் வெளிவளாகத்தில், 'பேவர் பிளாக்' தளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
திருப்பூர் அருகே நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. சமீபத்தில், கும்பாபிேஷக விழா விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. அதன்பின், பொறுப்பேற்ற அறங்காவலர் குழுவினர், கோவிலில் தேர்த்திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக, புதிய மரத்தேர் வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.
கோவில் வெளிவளாகத்தில் மழைநீர் தேங்கி பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கோவில் ராஜகோபுரத்தில் இருந்து, காசிபாளையம் ரோடு வரை, மண் தளமாக இருந்து வந்தது. பக்தர்கள் வசதிக்காக, கோவில் வெளிவளாகம் முழுவதும், 'பேவர் பிளாக்' தளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அறங்காவலர் குழுவினரின் முயற்சியால், வெளி வளாகத்தில் 'பேவர் பிளாக்' அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாட்டுடன், பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் முருகேசன், செயல் அலுவலர் செந்தில், அறங்காவலர்கள் பிரியா, சிவக்குமார், ஜெகதீஷ், அன்னபூரணி, கவுன்சிலர் விஜயலட்சுமி, கோபால்சாமி ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.

