/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்தவெளி பாராக மாறிய குளங்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
திறந்தவெளி பாராக மாறிய குளங்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திறந்தவெளி பாராக மாறிய குளங்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திறந்தவெளி பாராக மாறிய குளங்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : நவ 17, 2024 09:55 PM
உடுமலை ; உடுமலை பகுதியிலுள்ள முக்கிய நீராதாரங்களின் கரைகள், திறந்தவெளி பாராக மாறியுள்ளதால், மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உடுமலை நகரை ஒட்டி, ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட, ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம் உள்ளிட்ட குளங்கள் அமைந்துள்ளன.பாசனத்துக்கும், நிலத்தடி நீர் மட்டத்துக்கும் ஆதாரமாக உள்ள இக்குளங்களின் கரைகள், தற்போது, திறந்தவெளி 'பார்' போன்று மாறியுள்ளன.
நாள்தோறும், குளங்களின் கரையில், நுாற்றுக்கணக்கான காலி மதுபாட்டில்கள் வீசப்படுவது வழக்கமாகியுள்ளது.நகரம் மற்றும் புறநகர் பகுதியிலுள்ள 'டாஸ்மாக்' மதுபானக்கடைகளில் இருந்து, மதுபாட்டில்கள் வாங்கும் 'குடி'மகன்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில், குளங்களின் கரைகளை ஆக்கிரமித்து கும்மாளம் அடிக்கின்றனர். காலி மதுபாட்டில்களை உடைத்து, தண்ணீரிலும், கரைகளிலும், வீசிச்செல்கின்றனர்.
இதனால், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இதே போல், அனைத்து கிராம குளங்கள், ஓடைகள், தடுப்பணை சுவர்கள் உள்ளிட்ட நீராதாரங்களிலும் இப்பிரச்னை அதிகரித்து வருகிறது.
இதனால், அவ்வழியாக செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. நீராதாரங்கள் தொடர்ந்து மாசுபட்டு வருவதுடன், மக்களும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தும், பொதுப்பணித்துறை, போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
அதிகாரிகள் கூட்டு ரோந்து குழு அமைத்து, ரோந்து சென்றால், 'குடி'மகன்கள் அத்துமீறல் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.