/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளைஞர்களை கவரும் பாப்கார்ன், டிஷ்யூ ரகங்கள்
/
இளைஞர்களை கவரும் பாப்கார்ன், டிஷ்யூ ரகங்கள்
ADDED : அக் 25, 2024 10:31 PM
இந்த வருடம் என்ன புத்தாடைகள் வாங்கலாம் என காத்திருக்கும் 2கே கிட்ஸ்களை கவரும் விதமாக சந்தைகளில் பாப்கான் மற்றும் டிஷ்யூ ரகங்கள் ஏராளமாக வந்துள்ளன.
இந்த ரகங்கள் தற்போது இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. பாப்கார்ன் என்பது நம் சாப்பிடும் உணவு பொருள் அல்ல. மாறாக பாப்கார்ன் போன்றே தோற்றத்தில் புசுபுசுவென, மிகவும் மென்மையாக இருக்கக்கூடிய துணி ரகம்.
அதேபோன்று பிரின்டட் செய்யப்பட்ட டிஷ்யூ ரகங்களும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த தீபாவளி புது வரவுகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டு வாங்கி செல்கின்றனர். அத்துடன் மிகவும் மென்மையாக இருப்பதால் இந்த பாப்கான் மற்றும் டிஷ்யூ ரகங்களை தேர்வு செய்வதாக இளைஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.