sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'டிஜிட்டல் யுகத்தில் கடிதம்' தபால் துறையினர் அழைப்பு

/

'டிஜிட்டல் யுகத்தில் கடிதம்' தபால் துறையினர் அழைப்பு

'டிஜிட்டல் யுகத்தில் கடிதம்' தபால் துறையினர் அழைப்பு

'டிஜிட்டல் யுகத்தில் கடிதம்' தபால் துறையினர் அழைப்பு


ADDED : ஜன 24, 2025 10:02 PM

Google News

ADDED : ஜன 24, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; தபால்துறை சார்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் வரும், 31ம் தேதிக்குள் கடிதங்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் தபால்துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு. 'டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' (The Joy of Writing: Importance of Letters in a Digital age) எனும் தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

18 வயது அதிகமாகவும், குறைவாகவும் உள்ளவர்கள், சுய சான்று அளித்து போட்டியில் பங்கேற்கலாம். கடிதம் ஆங்கிலம், தமிழ், இந்தி மொழிகளில் உள்நாட்டு கடிதத்தில், 'ஏ 4' அளவு தாளில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், 1000 வார்த்தைகளுக்குள்ளும் இருக்க வேண்டும்.

எழுதும் கடிதத்தை,'தலைமை அஞ்சல்துறை பொது மேலாளர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002' எனும் முகவரிக்கு ஜன., 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேசிய அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு, 50 ஆயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுவோருக்கு முறையே 25 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய். மாநில அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு, 25 ஆயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுவோருக்கு முறையே, 10 ஆயிரம் மற்றும், 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் தகவல்களை அறியலாம், திருப்பூர் கோட்ட தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us