/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறை நாளிலும் தபால் துறை இயக்கம்
/
விடுமுறை நாளிலும் தபால் துறை இயக்கம்
ADDED : ஜன 02, 2026 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் கோட்ட தலைமை தபால் நிலையம், நேற்று ஆங்கில புத்தாண்டு விடுமுறை நாளிலும் சேவையை தொடர்ந்தது.
பெரும்பாலான சேவை நிறுவனங்களுக்கு அதிக விடுமுறைகள் இருப்பதில்லை. அதன்படி, நேற்று புத்தாண்டு விடுமுறையிலும் தபால் நிலையங்கள் வழக்கம் போல இயங்கின. விடுமுறை தினம் என்பதால் மக்கள் வருகை புரிந்து ஆதார், காப்பீடு, சேமிப்பு கணக்கு போன்ற சேவைகளை பெற்றதால் வழக்கத்தை விட சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்களின் சேவைக்காக, தொடர் விடுமுறைகளிலும் ஒன்று அல்லது இரு நாட்கள் மட்டும் விடுப்பு விட்டு மக்களுக்கு சேவையை வழங்குகிறது.

