/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தை ஏற்படுத்தும் குழி: வாகன ஓட்டிகள் 'கிலி'
/
விபத்தை ஏற்படுத்தும் குழி: வாகன ஓட்டிகள் 'கிலி'
ADDED : மார் 21, 2024 06:51 AM

அனுப்பர்பாளையம், : -திருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகரில் ஏற்பட்டுள்ள குழியால் தொடர் விபத்து ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பூரில் இருந்து, பெருமாநல்லுார், குன்னத்துார், கோபி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையாக பி.என்.ரோடு உள்ளது. இந்த ரோட்டில், எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும்.
பாண்டியன் நகரில் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் பெரிய அளவில் குழி ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் தேங்கி உள்ளது. குழி உள்ளதால், வாகனங்கள் ஒரு பக்கமாக செல்ல வேண்டி உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்களால் கடும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் குழியில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். குழியை சீர் செய்ய கோரி நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இதனால் பொது மக்களே விபத்தை தடுக்கும் வகையில் குழி ஏற்பட்டுள்ள பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். உயிர் சேதம் ஏற்படும் முன் ரோட்டை சீர் செய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

