ADDED : மார் 11, 2024 01:36 AM

அ நிறம் | அளவு
கோவை, பாப்பம்பட்டியில் இருந்து கோழி தீவனங்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று, ஒரத்தநாடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
வேனை, டிரைவர் கனகராஜ் ஓட்டி வந்தார். வெள்ளகோவில் - கரூர் ரோட்டில் ஒத்தக்கடை அருகே வேன் சென்ற போது, திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியானது. ரோட்டோரம் வேனை நிறுத்திய சில நிமிடங்களில், தீ பிடித்து எரிய துவங்கியது. வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் தீயை, விரைந்து அணைத்தனர். வேனின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
