ADDED : பிப் 16, 2024 01:40 AM
திருப்பூர்:திருப்பூர் - பி.என்., ரோடு, குமரானந்தபுரத்தில் பனியன் நிறுவனம் ஒன்றுக்கு, மின் இணைப்புக்கு எவ்வித முறையான உரிய கட்டணங்களை அரசுக்கு செலுத்தாமல், முறைகேடாக ஒயர் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, திருப்பூர் வடக்கு மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், நிறுவனத்தின் இணைப்பின் சர்வீஸ் ஒயரை, முறைகேடாக மாற்றம் செய்தது தெரிந்தது.
முறைகேட்டில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் கேங்மேன் ஆசைமணியை 'சஸ்பெண்ட்' செய்து திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் ராமசந்திரன் உத்தரவிட்டார்.
மேலும், சமீபத்தில் முறைகேடாக கட்டட கட்டுமான பணிகளுக்காக மின் மீட்டரை இடமாற்றம் செய்தது தொடர்பாக மின்பாதை ஆய்வாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அதில், வீட்டு மின் சாரம் இணைப்பை கட்டட கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தியது தொடர்பாக, கள ஆய்வு செய்து, 6 ஆயிரத்து, 318 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.