/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆயத்தம்
/
விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆயத்தம்
விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆயத்தம்
விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆயத்தம்
ADDED : நவ 10, 2024 04:47 AM

பல்லடம், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம், தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவை வட மாநிலங்களில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு செல்கின்றன. துணிகளை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற மேற்கொள்ளப்படும் பணிகளால் கூடுதல் செலவு மற்றும் காலதாமதம் ஆகிறது.
எனவே, காடா துணிகளை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றுவதற்கு உண்டான கட்டமைப்புகளை இங்கேயே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த, 2016ம் ஆண்டு பொது பயன்பாட்டு மையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
விசைத்தறியாளர்களின், 2 கோடி ரூபாய் பங்களிப்பு மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானியத் தொகையுடன் இந்த பயன்பாட்டு மையம் அமைக்கும் பணி துவங்கியது.
ஏறத்தாழ, 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பொது பயன்பாட்டு மைய கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதனை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'விசைத்தறி பொது பயன்பாட்டு மையத்தில், 60க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கட்டுமான பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும்,பொது பயன்பாட்டு மையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்து விடும்,' என்றார்.