தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒப்பந்தப்படி கூலி உயர்வு விசைத்தறியாளர் எதிர்பார்ப்பு

 ஒப்பந்தப்படி கூலி உயர்வு விசைத்தறியாளர் எதிர்பார்ப்பு

 ஒப்பந்தப்படி கூலி உயர்வு விசைத்தறியாளர் எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 07, 2026 09:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 09:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: ''ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காமல் ஏமாற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மானியத்துடன் கூடிய பசுமை மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி பெற்றுத் தர வேண்டும் என கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அமைச்சர் கமலியிடம் நேரில் மனு அளித்தனர்.

அவிநாசி பயணியர் மாளிகையில் நடந்த அமைச்சருடனான சந்திப்பில், அவிநாசி, தெக்கலுார், சோமனுார், பெருமாநல்லுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அமைச்சரிடம் அளித்த மனு: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் சாதாரண விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடிகளால் சோமனுார் ரகத்திற்கு 15 சதவீதமும், இதர ரகங் களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு வழங்க கடந்த 2025 ஏப்ரல் மாதம் இரு மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதற்காக 32 நாட்கள் வேலை நிறுத்தமும், 7 நாட்கள் உண்ணாவிரதமும் இருந்தோம். ஆனால், இந்த ஒப்பந்தக் கூலியை முழுமையாக வழங்காமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.கூலியைக் குறைத்து வழங்கும் உற்பத்தியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, 2026 ஒப்பந்தக் கூலியை அமல்படுத்த வேண்டும்.

நிறுத்தப்பட்டுள்ள 'பவர் டெக்ஸ் இந்தியா' திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். விசைத் தறிக்கூடங்களின் கூரைகளிலேயே சூரிய மின்சக்தித் தகடுகளை அமைத்துக் கொள்ள மாநில அரசு நிபந்தனையற்ற அனுமதி வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் தலா 30 சதவீதம் என மொத்தம் 60 சதவீத மானியம் வழங்கினால், விசைத்தறியாளர்கள் தங்களுக்குத் தேவையான பசுமை மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும்

இவ்வாறு, மனு அளித்தனர்.

கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர், இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us