/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் நிறுத்த அறிவிப்பும் ரத்தும்; தொழில் துறையினர் பாதிப்பு
/
மின் நிறுத்த அறிவிப்பும் ரத்தும்; தொழில் துறையினர் பாதிப்பு
மின் நிறுத்த அறிவிப்பும் ரத்தும்; தொழில் துறையினர் பாதிப்பு
மின் நிறுத்த அறிவிப்பும் ரத்தும்; தொழில் துறையினர் பாதிப்பு
ADDED : டிச 20, 2024 04:24 AM
பல்லடம்; மின் நிறுத்த அறிவிப்பும், ரத்து செய்வதும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக, பல்லடத்தில், சிறு மற்றும் குறு தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:
பல்லடம் வட்டார பகுதியில், விசைத்தறி, சைசிங், ஸ்பின்னிங், பஞ்சு நுால் மில்கள் உட்பட பல்வேறு சிறு குறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டே அனைத்து தொழில்களும் இயங்கி வருகின்றன. மின் வாரியம் சார்பில், பராமரிப்பு பணிகளுக்காக, மாதந்தோறும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு, மின் நிறுத்தம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படுவதால், அதற்கேற்ப உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையே, திடீரென, மின் நிறுத்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவிப்பதால், சிறு - குறு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.
இதேபோல், கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலர், மின் நிறுத்தம் காரணமாக, வேலைக்கு விடுப்பு எடுக்கின்றனர். மின் நிறுத்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஒரு நாள் மின் நிறுத்தம் செய்வதால், தொழிலாளர்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி இதுபோன்று மின் நிறுத்தம் அறிவிப்பதும், பின்னர் ரத்து செய்வதும் மின்வாரியத்துக்கு வாடிக்கையாகிவிட்டது.
இதனால், ஏராளமானோர் பாதிக்கப்படுவதால், மின் வாரியம் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.