ADDED : ஏப் 09, 2025 11:30 PM

அ நிறம் | அளவு
பலத்த காற்றுக்கு அம்மாபாளையம், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், சிறுபூலுவபட்டி, சோளிபாளையம், காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மரங்கள் சாய்ந்து மின் கம்பி மீது விழுந்ததால் 30 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன.
உதவி மின் பொறியாளர் சரவணன், மேற்பார்வையில் 30 மின் பணியாளர்கள் புதிய மின் கம்பங்களை நட்டு மின் வினியோகத்தை சீரமைக்கும் ஈடுபட்டு வந்தனர். மூன்று நாட்களுக்கு பின் அனைத்து சீரமைப்பு பணிகளும் முடிந்து நேற்று மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது.
