/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
170 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
/
170 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : டிச 20, 2025 05:33 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு, அனுமதி பெறாத சாய, சலவை நிறுவனங்கள், பிரின்டிங் நிறுவனங்கள், கழிவுநீரை சுத்திகரிக்காமல் திறந்துவிட்டு, இயற்கையை பாழ்படுத்தும் நிறுவனங்களை கண்டறிந்து, அந்நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்து வருகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு நேற்று கூடியது. இதில், ஜனவரி முதல் இம்மாதம் வரை ஓராண்டில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகங்கள் வாயிலாக, பட்டன், ஜிப், சாயமேற்றும் நிறுவனங்கள், பிரின்டிங் நிறுவனங்கள் என, 170 விதிமீறல் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, ஒருங்கிணைப்புக்குழு வாயிலாக, மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், இம்மாதம் நடத்திய ஆய்வில், முறைகேடாக இயங்கிய 21 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

