/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொகுதி எட்டிலும் 'சக்தி'களே மிகுதி
/
தொகுதி எட்டிலும் 'சக்தி'களே மிகுதி
ADDED : டிச 26, 2025 06:21 AM
திருப்பூர் மாவட்டம் உதயமான போது, எட்டு சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளரே அதிகம் இருந்தனர்; அடுத்து வந்த சில ஆண்டுகளில், பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்தது.
இறுதியாக, திருப்பூர் வடக்கு, பல்லடம், திருப்பூர் தெற்கு தொகுதிகளில் ஆண் வாக்காளர், பெரும்பான்மையாகவும், மற்ற தொகுதிகளில் பெண் வாக்காளர் அதிகமாகவும் இருந்தனர். தற்போதைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பின், மாவட்டத்தில், ஐந்து லட்சத்து, 63 ஆயிரத்து, 785 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், இரண்டு லட்சத்து, 77 ஆயிரத்து, 255 பேர் பெண்கள். இறுதி பட்டியலில், அனைத்து தொகுதிகளிலும், பெண் வாக்காளரே பெரும்பான்மை வாக்காளராக முன்னேறியுள்ளனர்.
எட்டு தொகுதிகளில், ஆண்களை காட்டிலும், 60 ஆயிரத்து, 734 பெண் வாக்காளர் கூடுதலாக இருக்கின்றனர். கடந்த, அக்., மாதம் வெளியான பட்டியலில், திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகளில் மட்டும், ஆண்களை காட்டிலும், பெண் வாக்காளர் குறைவாக இருந்தனர்.
நான்கு லோக்சபா தேர்தல்கள், மூன்று சட்டசபை தேர்தல்களில், ஆண் வாக்காளரே அதிகம் இருந்த, திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகளிலும், இம்முறை பெண் வாக்காளரே மெஜாரிட்டி வாக்காளராக உயர்ந்துள்ளனர்.
வரைவுபட்டியலில், ஒன்பது லட்சத்து, 10 ஆயிரத்து, 83 ஆண்கள், ஒன்பது லட்சத்து, 70 ஆயிரத்து, 817 பெண்கள், 244 திருநங்கைகள் என, 18 லட்சத்து, 81 ஆயிரத்து, 144 வாக்காளர் உள்ளனர்.

