/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜூனில் இருந்து 7 சதவீத சம்பள உயர்வு; பவர்டேபிள் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
/
ஜூனில் இருந்து 7 சதவீத சம்பள உயர்வு; பவர்டேபிள் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
ஜூனில் இருந்து 7 சதவீத சம்பள உயர்வு; பவர்டேபிள் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
ஜூனில் இருந்து 7 சதவீத சம்பள உயர்வு; பவர்டேபிள் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2025 11:04 PM

திருப்பூர்; 'சைமா' சங்கத்துடன் செய்துள்ள ஒப்பந்தப்படி, ஜூன் மாதத்தில் இருந்து, 7 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டுமென, திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் (சைமா) சங்கம், பவர்டேபிள் சங்கம் இடையே, சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, கடந்த, 2022 ஜூன் 4ம் தேதி, நான்கு ஆண்டுகளுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஒப்பந்தப்படி, முதல் ஆண்டில், 17 சதவீத சம்பள உயர்வு அளிப்பது என்றும், அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில், தலா, 7 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அவ்வகையில், அந்தந்த ஆண்டில் புதிய சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஒப்பந்த கணக்குப்படி, ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து சம்பள உயர்வு அமலாக்கப்பட வேண்டும். இருப்பினும், சில நிறுவனங்கள், உரிய சம்பள உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பதும், அதற்காக போராட்டம் நடத்தி சம்பளம் பெறுவதும் வாடிக்கையாக மாறிவிட்டது. 2025 ஜூன் முதல் வாரத்தில் இருந்து, 7 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். அதற்காக, பனியன் உற்பத்தியாளர்களுக்கு நினைவூட்டுதல் செய்ய, பவர் டேபிள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில்,'' பவர் டேபிள் நிறுவனங்களுக்கு, மின்சார கட்டண உயர்வு உட்பட, பல்வேறு வகையில், செலவு அதிகரித்துள்ளது. எனவே, பனியன் உற்பத்தியாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளபடி, ஜூன் மாதத்தில் இருந்தே , 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். இதுதொடர்பாக, 'சைமா' சங்கத்தில் கோரிக்கை விடுக்கப்படும்,'' என்றார்.