/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சதுரங்கத்தில் சாதிக்க பயிற்சியே உறுதுணை
/
சதுரங்கத்தில் சாதிக்க பயிற்சியே உறுதுணை
ADDED : நவ 14, 2024 04:57 AM

''சதுரங்கத்தில் சாதிக்க தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதுதான் பேருதவியாக இருக்கும்'' என்று கூறு கிறார் சதுரங்கத்தில் சாதித்து வரும் மாணவி பிரதிக்ஷா.
திருப்பூர், செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி, நான்காம் வகுப்பு மாணவி, பிரதிக் ஷா. ஒன்றாம் வகுப்பு முதல் சதுரங்க போட்டியில் சாதித்து வரும் இவர், தற்போது, ஒன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது படிப்பது, நான்காம் வகுப்பு. ஆனால், இதுவரை, 50க்கும் அதிகமான சதுரங்க போட்டிகளில் தனது திறமையை காட்டியுள்ளார்.
கரூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், கோவை உள்ளிட்ட இடங்களில் நடந்த மாநில சதுரங்க போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளார். கடந்த வாரம் கோவையில் நடந்த போட்டியில் பங்கேற்று, நான்காமிடம் பெற்று, அனைவரது பாராட்டையும் பெற்றார். திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷனில், வெற்றி பெறும் குழந்தைகளில் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
மாணவி பிரதிக் ஷா கூறுகையில், ''சதுரங்கம் விளையாடுபவரை பார்த்து, விதிமுறைகளை தெரிந்து, சதுரங்கம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. சதுரங்கத்தில் சாதித்து, பெரிய நிலையை அடைய வேண்டு மெனில், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பயிற்சி ஒன்று மட்டும் தான் சதுரங்கத்தில் சாதிக்க பேருதவியாக இருக்கும். எந்த நிலையிலும் ஆட்டத்தை போக்கை மாற்றும் திறமை நம்மிடத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.