/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவாலயத்தில் பிரதோஷம்: பக்தர்கள் பரவசம்
/
சிவாலயத்தில் பிரதோஷம்: பக்தர்கள் பரவசம்
ADDED : ஜன 28, 2025 05:19 AM

திருப்பூர் : தை மாத பிரதோஷமான நேற்று, திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவில், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சோமவார பிரதோஷம் என்பதால், சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் தீபம் ஏற்றி வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை, 4:00 மணிக்கு மூலவருக்கும், அதனை தொடர்ந்து அதிகாரி நந்திக்கும் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, உமாமகேஸ்வரருக்கு, மகா சுபிேஷகமும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகள், கோவில் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தனர்.
எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், மாலையில் மூலவர் மற்றும் அதிகாரநந்திக்கு மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்கார பூஜையும், சுவாமி பிரகார உலாவும் நடந்தது. திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் நடந்த பிரதோஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.