/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விருது பெற்ற பெண்ணுக்கு பாராட்டு
/
விருது பெற்ற பெண்ணுக்கு பாராட்டு
ADDED : ஜன 12, 2025 11:55 PM

பல்லடம் அடுத்த ஆறாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மனைவி செல்வநாயகி, 48. கால்நடை விவசாயியான இவருக்கு, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தென்னிந்திய அளவிலான பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், சிறந்த பால் உற்பத்தி செய்யும் விவசாயிக்கான விருது வழங்கப்பட்டது. தமிழக அளவில் விருது பெற்ற ஒரே ஒரு பெண்மணி இவர் மட்டுமே. நேற்று, ஊர் பொதுமக்கள் சார்பில் செல்வநாயகிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், 'தமிழக அளவில், செல்வநாயகிக்கு, சிறந்த பால் உற்பத்தியாளருக்கான விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மாநில அளவில் இவர் தேர்வு செய்யப்பட்டது, திருப்பூர் மாவட்டத்துக்கு மட்டுமன்றி, ஆறாக்குளம் கிராமத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றனர்.