/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு
/
சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு
ADDED : அக் 23, 2024 06:34 AM

திருப்பூர் : விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியரை, முருகு மெட்ரிக் பள்ளி நிர்வாகம் பாராட்டி கவுரவித்துள்ளது.
ஈரோட்டில், மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகள சாம்பயன்ஷிப் -2024 போட்டி நடந்தது. இதில், திருப்பூர் முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கிருத்திக், 'டிரையத்தலான்' போட்டியில், 14வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த, 10ம் தேதி, மூலனுார், ஆனுார் வித்யாலயா பள்ளியில், மாவட்ட சதுரங்க போட்டியில், இதே பள்ளி மாணவர் மாணவர் தக் ஷன், 11 வயது பிரிவிலும், எட்டாம் வகுப்பு மாணவி ஹாசினி, 14 வயது பிரிவிலும், முதல் இடத்தை பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராமச்சந்திரன், ஸ்ரீராம்சுரத், சதுரங்க பயிற்றுநர் கண்ணன் ஆகியோருக்கு, பள்ளியின் தாளாளர் பசுபதி, சசிகலா பாராட்டு தெரிவித்தனர்.