/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரத்தியங்கிரா தேவி நிகும்பலா யாகம்
/
பிரத்தியங்கிரா தேவி நிகும்பலா யாகம்
ADDED : மார் 31, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அடுத்த வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடத்தில், 16 அடி உயரத்துடன் பிரித்தியங்கிரா தேவி மூலவராக அருள்பாலிக்கிறார். நேற்று முன்தினம் காலை, அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, ஏவல், பில்லி, சூனியம், பகைவர் பயம் போக்கும், நிகும்பலா யாகம் நடந்தது.
வரமிளகாய் கொண்டு நடந்த இந்த யாகத்தில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ கல்யாண பொங்கு சனீஸ்வரருக்கு சனிப்பெயர்ச்சி சிறப்பு வேள்வி வழிபாடுகள் நடந்தன.