ADDED : ஏப் 20, 2026 09:52 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்:திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம், அர்த்த ஜாமபூஜை அடியார் திருக்கூட்டம் சார்பில், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மழை பெய்து குளிர்விக்க வேண்டும் என, பக்தர்கள் சார்பில் வேண்டுதல் நடந்தது. காலை, 8:00 மணி துவங்கி, மாலை, 3:00 மணி வரை, சிவனடியார்கள் 52 பதிகங்களில் உள்ள, அனைத்து பாடல்களையும் பண்ணிசையுடன் பாராயணம் செய்தனர்.
