/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவமழைக்கு முன் இடுபொருட்கள்; மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
/
பருவமழைக்கு முன் இடுபொருட்கள்; மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
பருவமழைக்கு முன் இடுபொருட்கள்; மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
பருவமழைக்கு முன் இடுபொருட்கள்; மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 07, 2025 08:46 PM
உடுமலை; தென்மேற்கு பருவமழை சீசனில், சிறு தானிய சாகுபடிக்கான இடுபொருட்களை வேளாண்துறை சார்பில், வினியோகிக்க, மலைவாழ் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில், அங்கு வசிக்கும் மக்கள், தங்கள் உணவிற்காக பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, குழிப்பட்டி, மாவடப்பு, கோடந்துார் போன்ற மலைவாழ் குடியிருப்புகளில், சாமை, ராகி போன்ற சிறு தானிய சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால், சிறுதானிய சாகுபடி பரப்பு குறைந்த நிலையில், வேளாண்துறை சார்பில், முன்பு, சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அத்திட்டத்தின் கீழ், குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிகொட்டான்பாறை, ஆட்டுமலை, கோடந்துார் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, ராகி, சாமை ஆகிய விதைகள் மானியத்தில், வேளாண்துறையால் வழங்கப்பட்டன.
பின்னர், நுண்ணுாட்ட சத்து உட்பட இடுபொருட்களும், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறையினர் வழங்கினர்.
தொடர்ச்சியான சீசன்களில், இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போது, மலைவாழ் மக்கள், விவசாயம் மேற்கொள்வதற்கான பட்டாவும் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வரும் தென்மேற்கு பருவமழை சீசனில், சாகுபடி மேற்கொள்ள அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். பருவமழை துவங்கும் முன், விதை, இடுபொருட்கள் வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும் என மலைவாழ் கிராம மக்கள், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

