/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு; நேற்று வரை 638 பேர் சேர்ந்துள்ளனர்
/
அரசு கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு; நேற்று வரை 638 பேர் சேர்ந்துள்ளனர்
அரசு கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு; நேற்று வரை 638 பேர் சேர்ந்துள்ளனர்
அரசு கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு; நேற்று வரை 638 பேர் சேர்ந்துள்ளனர்
ADDED : ஜூன் 09, 2025 09:43 PM
உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், முதற்கட்ட கலந்தாய்வில், நான்காம் நாளில், 84 மாணவர்கள் சேர்ந்தனர்.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2025--26ம் கல்வி ஆண்டுக்கான, இளநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
முதற்கட்ட கலந்தாய்வு துவங்கி நடந்து வரும் நிலையில், பொதுப்பிரிவில், 4ம் நாளாக நேற்றும் கவுன்சிலிங் நடந்தது. மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியலில், 5,501 முதல் 6,974 வரையிலான இடங்களைப் பெற்ற மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றனர்.
இதில், அறிவியல் பிரிவில், 45 மாணவர்களும், கலைப்பிரிவில் 18 மாணவர்களும், வணிகவியல் பிரிவில், 21 மாணவர்கள் என மொத்தம், 84 மாணவர்கள் நேற்று கல்லுாரியில் சேர்ந்தனர்.
இதுவரை நடந்த முதற்கட்ட கலந்தாய்வில், 638 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இன்று, 1 முதல் 6,974 வரையிலான தரவரிசை பெற்றிருக்கும் மாணவர்களுக்கு, தமிழ்ப்பாடப்பிரிவில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில், தமிழ் இலக்கியப் பாடத்திற்கும், ஆங்கிலப் பாடத்தில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில், ஆங்கில இலக்கியப் பாடத்திற்குமான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடக்க உள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், பிளஸ் -1. பிளஸ்-2, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய அசல் மற்றும் மூன்று நகல்கள், உரிய கல்விக் கட்டணம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவரின் தரவரிசை இடம்பெற்ற கல்லுாரி இணையதளப் பக்கத்தின் நகல், சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு கல்லுாரியின் இணையதளமான, www.gacudpt.in பார்வையிடலாம், என கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.