/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுதந்திர தின விழா கொண்டாட ஆயத்தம்
/
சுதந்திர தின விழா கொண்டாட ஆயத்தம்
ADDED : ஆக 01, 2025 10:10 PM
திருப்பூர்; சுதந்திர தின விழாவை, சிறப்பாக கொண்டாட மாவட்ட வருவாய்த்துறையினர் ஆயத்த பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வரும், 15ம் தேதி, சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், வருவாய்த்துறை சார்பில் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், வருவாய்த்துறை, போலீஸ் உள்பட அரசு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து அரசு துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார்.
அந்தந்த அரசு துறை அலுவலர்கள், சுத்திர தின விழாவின் போது, தங்கள் துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பட்டியலை உரிய காலத்துக்குள் தயாரித்து வழங்க வேண்டும். விழா மேடை, தியாகிகள், செய்தியாளர்கள், பயனாளிகள் அமரும் இடங்களில் பந்தல் அமைத்து, இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
போதிய குடிநீர், மொபைல் டாய்லெட் வசதிகள் ஏற்படுத்தவேண்டும். மருத்துவ குழு, தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும். போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.
மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, சிறப்பாக நடத்த வேண்டும். விழா சிறப்பாகவும், அமைதியான முறையிலும் நடத்த, பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், போலீஸ் எஸ்.பி., அசோக் கிரீஷ் யாதவ், மாநகராட்சி கமிஷனர் அமித், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், போலீஸ் துணை கமிஷனர்கள் தீபா, பிரவீன் கவுதம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.