ADDED : ஜூன் 19, 2026 02:52 AM
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான 3 நாட்கள் களப்பயிற்சி வகுப்பை கலெக்டர் மனீஷ் நாரணவரே துவக்கி வைத்தார்.
இதில் பங்கேற்றுள்ள 60 களப்பயிற்சியாளர்கள் (புள்ளியியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள்), மாவட்டத்தில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளவிருக்கும் 3,398 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 598 கண்காணிப்பாளர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளனர்.
இக்கணக்கெடுப்புப் பணிக்கு மாவட்ட முதன்மை அலுவலராகக் கலெக்டரும், மாநகராட்சிப் பகுதிக்கு மாநகராட்சி கமிஷனரும் செயல்படுவர்.
பொதுமக்கள் அடுத்த மாதம் (ஜூலை) 17- முதல் 31-ம் தேதி வரை தாங்களாகவே இணையதளம் வழியாக டிஜிட்டல் முறையில் விவரங்களைத் தெரிவிக்கலாம்.
ஆகஸ்ட் 1 முதல் 30- வரை கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடுகள் தோறும் சென்று வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
