/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோய் பரவலுக்கு முன் தடுப்பு நடவடிக்கை: உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்
/
நோய் பரவலுக்கு முன் தடுப்பு நடவடிக்கை: உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்
நோய் பரவலுக்கு முன் தடுப்பு நடவடிக்கை: உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்
நோய் பரவலுக்கு முன் தடுப்பு நடவடிக்கை: உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 24, 2024 09:20 PM
உடுமலை: உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. நாள்தோறும் காலையில் வெப்பமாகவும், மாலையில் மழை துவங்கும், இரவு முழுவதும் வெளுத்து வாங்கும் பருவநிலை உள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் வடிய துவங்கும்போது, மீண்டும் மழைப்பொழிவு ஆரம்பமாகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பது தவிர்க்க முடியாத சூழலாக மாறிவிட்டது.
கிராமப்பகுதிகளில் திறந்த வெளிகளில் மழைநீர் தேங்குவதால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும், விஷப்பூச்சிகளும் மழைநீரில் அடித்து வரப்படுகின்றன. பருவநிலை மாற்றம் தொடர்ந்து ஏற்படுவதால், நோய்த்தொற்று ஏற்படும் சூழலாக உள்ளது.
வழக்கமாக மருத்துவமனைகளில், டெங்கு பாதிக்கப்பட்டோர் பட்டியல் அடிப்படையில் அவர்களின் குடியிருப்பு உள்ள கிராமங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இது நோய்கட்டுபடுத்துதற்கான நடவடிக்கையாக மட்டுமே உள்ளது.
தற்போது பரவலாக நோய்தொற்று ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் மழைநீரில் தேங்குவதால், அவற்றிலிருந்து நோய் பரவுதல், கொசுத்தொல்லை அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு டெங்கு மட்டுமின்றி பல்வேறு காய்ச்சலும் பரவுகிறது.
இதனால் அனைத்து கிராமங்களிலும் குப்பைக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவும், கொசுப்புழு ஒழிப்பு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சுழற்சி முறையில் தீவிரப்படுத்தவும், ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.