/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மும்மடங்கு விலை உயர்வு; ஒரு முருங்கை 25 ரூபாய்
/
மும்மடங்கு விலை உயர்வு; ஒரு முருங்கை 25 ரூபாய்
ADDED : டிச 06, 2024 04:51 AM
திருப்பூர், : சீசன் முடிந்ததால், முருங்கை விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று சந்தையில் ஒரு முருங்கைக்காய், 20 முதல் 25 ரூபாய் வரை விற்றது.
கார்த்திகை மாத பிறப்புக்கு முன்பே, முருங்கைக்காய் சீசன் முடிந்து விட்டது. சபரிமலை சீசன் என்பதால், கடைசி பருவத்தில் பயிரிட்டவர்கள் மட்டுமே முருங்கைக்காய் கொண்டு வருகின்றனர்.
தென்னம்பாளையம் மார்க்கெட், தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட எங்கும் முருங்கை இல்லாத நிலையில், சந்தைக்கு மூன்று முதல், ஐந்து கிலோ மட்டும் வருவதால், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நேற்று ஒரு கிலோ, 350 ரூபாய்; கட்டு, 300 ரூபாய்க்கு விற்றது; இதனால், ஒரு முருங்கை, 20 - 25 ரூபாயாக விலை உயர்ந்திருந்தது. சீசன் நாட்களில் கிலோ, 120 முதல், 150 ரூபாய்; ஒரு முருங்கைக்காய், ஆறு முதல், எட்டு ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால், தற்போது முகூர்த்த சீசனை ஒட்டி முருங்கைக்கு மும்மடங்கு விலை உயர்ந்துள்ளதால், முருங்கை கொண்டு வரும் விவசாயிகள், இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரம், சாம்பாருக்கு சுவை கூட்டும் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.