/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலை பொருட்களின் விலை உயர்வு
/
புகையிலை பொருட்களின் விலை உயர்வு
ADDED : ஜூலை 19, 2011 12:09 AM
திருப்பூர் : புகையிலை பொருட்கள் மீது புதிய வரி விதிக்கப் பட்டுள்ளதால், அவற்றின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட் களின் விலையை 12.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீத மாக அரசு உயர்த்தி உள்ளது.
பான்பாரக், மூக்குப் பொடி, சுருட்டு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, 20 சதவீத வரி விதிக்கப் பட்டுள்ளது. பீடி மற்றும் பீடிசார்ந்த புகையிலை பொருட்களின் வரிவிலக்கும் ரத்து செய்யப்பட்டு, 14.5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.வரிவிதிப்பை தொடர்ந்து பீடி, சிகரட் நிறுவனங்கள் தங்கள் நிறுவன பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. மூன்று ரூபாய்க்கு விற்ற சிகரட் 3.50 க்கும், நான்கு ரூபாய் விற்ற சிகரட் 4.50க்கும் விற்கப்படுகிறது.
ஒன்பது ரூபாய்க்கு விற்ற கட்டுபீடி 11 ரூபாய்க்கும், ஆறு ரூபாய்க்கு விற்கப்பட்ட கட்டு பீடி ஏழு ரூபாய்க்கும் தற்போது விற்கப்படுகிறது. வியாபாரிகள் கூறுகையில்,' பீடி கட்டாக மட்டுமே வியாபாரம் செய்யப்படுகிறது; சில்லறை விற்பனை இல்லை. சிகரட் விலையில் ஏற்றதாழ்வு உள்ளது; ஒவ் வொரு இடத்திலும் ஒவ்வொரு விலைக்கு விற்கின் றனர். பான்பாரக், புகையிலை வருவது குறைந்து, பற்றாக் குறை ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விலை ஏற்றப்பட்டது. ஆதலால், தற்போது அவைகளின் விலை உயரவில்லை,' என்றனர்.