/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துவக்கப்பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழாவில் அசத்தல்
/
துவக்கப்பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழாவில் அசத்தல்
ADDED : நவ 06, 2024 09:24 PM
உடுமலை; உடுமலை வட்டாரத்தில், அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா நேற்று நடந்தது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, கலைத்திருவிழா போட்டிகள் வகுப்புகள் அடிப்படையில் தொடர்ந்து நடக்கிறது. நடப்பாண்டில், கூடுதலாக துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும் அந்த வகுப்புகளுக்கு ஏற்ப போட்டிகள் நடத்தப்படுகிறது.
பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, நேற்று உடுமலை வட்டார அளவில் போட்டிகள் நடந்தது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பல்வேறு போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கான நடனம், எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளியிலும், இதரப்போட்டிகள் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தன. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒப்புவித்தல் போட்டி, மழலையர் பாடல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், ஆங்கில பாடல்கள், மாறுவேடப்போட்டிகள் நடந்தன.
மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி, மெல்லிசை தனிப்பாடல், திருக்குறள் ஒப்புவித்தல், தேசபக்தி பாடல்கள், களிமண் பொம்மைகள், மாறுவேடப்போட்டி, குழுவாக நாட்டுப்புற நடனம், குழுவாக பரத நாட்டியம் உள்ளிட்டபோட்டிகள் நடந்தன.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.