ADDED : ஆக 21, 2026 05:45 AM
காங்கேயம்:தமிழ்நாடு
தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில்,
காங்கேயத்தில் வட்டார கல்வி அலுவலகம் முன் நேற்று மாலை கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடந்தது.
டிட்டோ-ஜாக் காங்கேயம் வட்டார தலைவர்கள்
கார்த்திகேயன், காளியப்பன் தலைமை வகித்தனர். பழைய ஓய்வூதிய
திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுக்கு
அனுபவ வருடங்களுக்கு ஈடாக ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.
அரசு
உதவி பெறும் பள்ளியில் நிபந்தனை அடிப்படையில் பணியாற்றும்
பணியாளர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 20 அம்ச
கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல்
தாராபுரம் வட்டார கல்வி அலுவலகம் முன், தமிழக ஆசிரியர் கூட்டணி
வட்டார செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்
தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பொன்னுச்சாமி,
செந்தில்குமார், பாக்கியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
