/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதமர் காப்பீடு திட்டம் :பயனாளி பதிவு முகாம்
/
பிரதமர் காப்பீடு திட்டம் :பயனாளி பதிவு முகாம்
ADDED : ஜன 06, 2024 11:59 PM
திருப்பூர்;பெருமாநல்லுார் செல்வ விநாயகர் கோவில் கொண்டத்தம்மன் நகரில், பிரதமர் காப்பீடு திட்டத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு அட்டை பெற பயனாளிகள் பதிவு முகாம் நடந்தது.
இதில், ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் உள்ளிட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ரஞ்சித், சுந்தரமூர்த்தி, சிவமணி கண்டன், சுதா பிரியா, பவித்ரா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்று மருத்துவ காப்பீடுக்கு பதிவு செய்தனர். பா.ஜ., திருப்பூர் வடக்கு ஒன்றிய பொது செயலாளர் குமார், துணை தலைவர் காசிராஜன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பத்மாவதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.