/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார்; பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு
/
பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார்; பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு
பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார்; பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு
பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார்; பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு
ADDED : ஜன 30, 2024 12:36 AM

திருப்பூர்;மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருவது தொடர்பாக பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்: என் மக்கள்' யாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றார். இந்த யாத்திரை திருப்பூரில் நடப்பது தொடர்பாக, இருமுறை தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. யாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டத்தில் நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.
அதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி திருப்பூர் வருகை தொடர்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொது செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். பத்து லட்சம் பேர் இதில் பங்கேற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை பல்லடம் பகுதியில் நடத்த கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிப்., மாதம் 20, 25, 28 ஆகிய, மூன்று தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் கூட்டம் நடக்கும்,' என்றனர்.