ADDED : ஆக 29, 2026 06:54 AM
காங்கேயம்:திருப்பூர்,
கத்தக்கண்னி கீரனுார் நால்ரோடு வழியாக, ஈரோடுக்கு டி.கே.எஸ். என்ற
தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் செல்வதால்
பள்ளி, கல்லுாரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் இந்த பஸ்
மூலம் பயணித்து வந்தனர். இந்நிலையில் சரியாக கலெக் ஷன் இல்லாததால்,
ஓரிரு நாட்களுக்கு பிறகு இந்த வழித்தடத்தில் இனி வர மாட்டோம் என, பஸ்
பயணிகளிடம் நடத்துனர் கூறியுள்ளார்.
அதற்கு அப்பகுதி மக்கள்,
பள்ளி குழந்தைகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை, 9:15 மணியளவில்
ரெட்டியபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற காங்கேயம் போலீசார், மக்களிடம்
பேச்சு நடத்தினர்.
பின்னர், பஸ் உரிமையாளரிடம் பேசினர். வேறு பஸ்
இயக்கும் வரை, இதே வழித்தடத்தில் எங்கள் பஸ் இயக்கப்படும் என
தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து
சென்றனர்.
