/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : மே 21, 2025 11:26 PM
உடுமலை,; திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (23ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை, 10:00 முதல் மதியம், 1:30 மணி வரை முகாம் நடைபெறும்.
திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த, பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை அளிக்கும் நிறுவனங்களால் தேர்வு செய்யப்படுவோருக்கு, முகாம் நாளிலேயே பணி நியமன ஆணை வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்2, ஐ.டி.ஐ., - டிப்ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தோர் அனைவரும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போர், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை கொண்டு வரவேண்டும்.
முகாமில் பங்கேற்கும் நிறுவனங்களும், வேலை தேடுவோரும், www.tnprivatejobs.tn.gov.in என்கிற தளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.