/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மார் 18, 2025 04:02 AM
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தவுள்ளன.கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
வரும், 29ம் தேதி, காலை, 8:30 மணி முதல், மாலை, 3:00 மணி வரை பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் தனியார் துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில், எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல், 10 ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு பொறியியல் மற்றும் தொழில் கல்வி படித்தவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் என, அனைத்து விதமான கல்வித்தகுதி பெற்றவர்களும் பங்கேற்கலாம்.
தனியார் துறையில் வேலை பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது; இது, முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவை. மேலும் விவரங்களுக்கு, 94990 55944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் இளைஞர்கள், தங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் சுய விவரக் குறிப்புடன், வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். வேலையளிக்கும் நிறுவனத்தினரும், வேலை தேடுவோரும், வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கு, www.tnprivatejobs.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.