/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 20, 2024 05:49 AM
திருப்பூர் : வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை, 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 439ல் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
வேலை வழங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. வேலை தேடுவோர் தங்கள் சுய விவரம், வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். முன்னதாக இதற்கான பதிவினை செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் எழுதப் படிக்கத் தெரிந்தோர் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐ,டி.ஐ., டிப்ளமோ, தையல் பயிற்சி முடித்தோர் இதில் பங்கேற்கலாம்.
இதில், பங்கேற்போர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, பதிவு புதுப்பித்தல், உதவி தொகை பெற விண்ணப்பித்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம். தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுவோர், வேலை வாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படாது.
மேலும் விவரங்களுக்கு, 0421 299 9152, 94990 55944 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.