ADDED : மார் 14, 2024 12:02 AM
திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (15ம் தேதி) நடைபெறுகிறது.
காலை, 10:30 மணிக்கு துவங்கும் முகாமில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளரை தேர்வு செய்கின்றன. வேலை தேடுவோர், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய விவரங்களுடன் முகாமில் பங்கேற்கவேண்டும். எழுதப்படிக்க தெரிந்தோர் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தோர், தையல் பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
வேலை தேடுவோரும், வேலை அளிப்பவர்களும், https://www.tnprivatejobs.gov.in என்கிற தளத்தில் முன்பதிவு செய்யவேண்டும்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்போர், வேலைவாய்ப்பு மையத்தில் புதிய பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தனியார் துறை வேலையில் இணைவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. மேலும் விவரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
