தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தனியார் வேலை முகாம் 143 பேருக்கு பணியாணை

 தனியார் வேலை முகாம் 143 பேருக்கு பணியாணை

 தனியார் வேலை முகாம் 143 பேருக்கு பணியாணை


ADDED : மே 24, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 04:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது. முகாம் ஏற்பாடுகளை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர். முகாமில், 45 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன; 167 ஆண்கள்; 325 பெண்கள் என, 492 வேலை தேடுவோர் பங்கேற்றனர்.

அவர்களில், தகுதியின் அடிப்படையில், 68 ஆண்கள்; 75 பெண்கள் என, 143 பேருக்கு வேலை கிடைத்தது; முகாம் நிறைவாக, பணி ஆணை வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களில், 59 பேர், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us