/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை
/
ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை
ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை
ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை
ADDED : ஜூன் 24, 2025 12:47 AM

திருப்பூர்; திருப்பூர் அரசுப்பள்ளிகளில் பயின்று, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்றிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, சங்க கட்டடத்தில் நடந்தது.
சங்க பொது செயலர் திருக்குமரன் வரவேற்றார். சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சக்திவேல் பேசுகையில், ''எந்தவொரு சங்கமும் முன்னெடுக்காத ஒரு நிகழ்வை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்னெடுத்துள்ளது'' என்றார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, 27 அரசு பள்ளிகளில் பயின்று, முதல் மூன்றிடம் பெற்ற, 128 மாணவர்களுக்கு, பரிசுத் தொகையாக, 3.30 லட்சம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 12ம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்களுக்கு முறையே, 5,000, 4,000, 3,000 ரூபாய், 10ம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்களுக்கு, 3,000, 2,000, 1,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
அனைத்து அரசுப்பள்ளிகளுக்கு, நினைவு பரிசாக கேடயம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை செய்த, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் ஈஸ்வரனை பாராட்டி, கேடயம் வழங்கப்பட்டது. சங்க இணை செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார்.