UPDATED : நவ 26, 2026 10:48 PM
ADDED : நவ 26, 2026 10:46 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் கல்வியறிவுக் குழுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கலெக்டர் முத்துக்குமரன், புத்தகம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி, பள்ளி மற்றும் கல்லுாரிகளில் செயல்படும் தேர்தல் கல்வியறிவுக் குழுக்கள் வாயிலாக, வருங்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பு உணர்வை வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கல்வி நிறுவனம், சட்டமன்றத் தொகுதி மற்றும் மாவட்ட அளவில், கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.முதல் 10 இடம் பெற்றவர்களுக்கு, கலெக்டர் முத்துக்குமரன் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கண்ணன், தனி தாசில்தார் (தேர்தல்) தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
