ADDED : ஜன 26, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சியின், 42வது வார்டு பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி உயர்நிலை பள்ளி, கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளி, செல்லம் நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில், குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, தேசிய கொடியை ஏற்றிவைத்து பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

