/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதார, விழிப்புணர்வு முகாமில் சிறந்த பசுங்கன்றுகளுக்கு பரிசு
/
சுகாதார, விழிப்புணர்வு முகாமில் சிறந்த பசுங்கன்றுகளுக்கு பரிசு
சுகாதார, விழிப்புணர்வு முகாமில் சிறந்த பசுங்கன்றுகளுக்கு பரிசு
சுகாதார, விழிப்புணர்வு முகாமில் சிறந்த பசுங்கன்றுகளுக்கு பரிசு
ADDED : ஜூன் 25, 2025 09:49 PM

உடுமலை; லிங்கமநாயக்கன்புதுார் கிராமத்தில் நடந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில், சிறந்த பசுங்கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சி லிங்கமநாயக்கன்புதூரில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
கருத்தறியாமை நீக்க சிகிச்சை; சினைபரிசோதனை; குடற்புழு நீக்கம்; செயற்கை முறை கருவூட்டல், சிறு அறுவை சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டது. வட்டார கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் வெங்கடேசன் கால்நடை பராமரிப்பு குறித்து பேசினார்.
முகாமில், சிறந்த மூன்று விவசாயிகளுக்கு விருதும்; பசுங்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசும் வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள் செல்வகுமார் சிவக்குமார் கால்நடை ஆய்வாளர் சின்னதுரை, கால்நடை உதவியாளர்கள் குமரேசன் மதன்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாய், கோழி, ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. சுற்றுப்பகுதி கால்நடை வளர்ப்போர் பயன்பெற்றனர்.