காஸ் வினியோகத்தில் சிக்கலா? கட்டுப்பாட்டு அறை துவக்கம்
காஸ் வினியோகத்தில் சிக்கலா? கட்டுப்பாட்டு அறை துவக்கம்
ADDED : மார் 16, 2026 07:18 AM
உடுமலை: சமையல் காஸ் வினியோகம் சீராக மேற்கொள்ளும் வகையில், மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதோடு, புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நடந்து வரும், ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக, இந்தியாவில், சமையல் காஸ் உள்ளிட்ட, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான சமையஸ் காஸ் சிலிண்டர்கள் சீரான மற்றும் தடையின்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் வகையில், திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்வதில், தட்டுப்பாடு ஏற்பட்டால், அது குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் : 0421- -2218455 என்ற எண்ணிற்கு புகார் தெரிவித்து தீர்வு காணலாம், என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
