/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டோவில் பயணியரை ஏற்றுவதில் பிரச்னை; போலீசார் நடவடிக்கை அவசியம்
/
ஆட்டோவில் பயணியரை ஏற்றுவதில் பிரச்னை; போலீசார் நடவடிக்கை அவசியம்
ஆட்டோவில் பயணியரை ஏற்றுவதில் பிரச்னை; போலீசார் நடவடிக்கை அவசியம்
ஆட்டோவில் பயணியரை ஏற்றுவதில் பிரச்னை; போலீசார் நடவடிக்கை அவசியம்
ADDED : ஏப் 15, 2025 11:15 PM
உடுமலை; உடுமலை - பழநி ரோட்டில் உள்ள, கல்லுாரி முன் பயணியரை ஏற்றுவதில் ேஷர் ஆட்டோக்களில் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை - பழநி ரோட்டில் உள்ள ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர்.
உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியிலிருந்தும் மாணவியர் இங்கு படிக்கின்றனர். கிராமப்புற அரசு பஸ்கள், தொலைதுார பஸ்கள், தனியார் பஸ்களும் இக்கல்லுாரி பஸ் ஸ்டாப்களில் நின்று செல்கின்றன.
இருப்பினும், அருகில் பள்ளிகளும் இருப்பதால், கல்லுாரி விடும் நேரங்களில் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க மாணவியர், பேராசிரியர்கள் பஸ் ஸ்டாண்ட் வரை செல்வதற்கு ேஷர் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர்.
ேஷர் ஆட்டோக்களில், விதிமுறை மீறி அதிக எண்ணிக்கையில் மாணவியரை ஏற்றிச்செல்கின்றனர்.
அதிக எண்ணிக்கையில் மாணவியரை ஏற்றுவதற்கு, கல்லுாரி விடும் நேரத்துக்கு முன்பாக ஆட்டோக்கள் அங்கு வந்து காத்திருக்கின்றன. அதிக மாணவர்களை ஏற்ற, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது.
இதனால் அந்த பஸ் ஸ்டாப்பில் நாள்தோறும் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அங்கு காத்திருக்கும் மற்ற பயணியரும் அச்சத்துக்குள்ளாகின்றனர்.
கிராமப்பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பஸ் இருப்பதால், மாணவியரும் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். இப்பிரச்னையை தவிர்க்கவும், விதிமுறையை பின்பற்றி மாணவியரை ஆட்டோக்களில் ஏற்றி செல்வதற்கும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

