sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஜாப் ஒர்க்' நிறுவனம் 45 நாளில் பணம் பெறுவதில் சிக்கல்!: 2 ஆண்டாகியும் முழுமையாக அமலாகாத சட்டம்

/

'ஜாப் ஒர்க்' நிறுவனம் 45 நாளில் பணம் பெறுவதில் சிக்கல்!: 2 ஆண்டாகியும் முழுமையாக அமலாகாத சட்டம்

'ஜாப் ஒர்க்' நிறுவனம் 45 நாளில் பணம் பெறுவதில் சிக்கல்!: 2 ஆண்டாகியும் முழுமையாக அமலாகாத சட்டம்

'ஜாப் ஒர்க்' நிறுவனம் 45 நாளில் பணம் பெறுவதில் சிக்கல்!: 2 ஆண்டாகியும் முழுமையாக அமலாகாத சட்டம்

1


UPDATED : ஜன 19, 2026 03:40 PM

ADDED : ஜன 19, 2026 05:21 AM

Google News

UPDATED : ஜன 19, 2026 03:40 PM ADDED : ஜன 19, 2026 05:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''உற்பத்தி நிறுவனங்கள், 45 நாட்களில் கட்டணம் வழங்கும் உத்தரவை, முறையாக செயல்படுத்த வேண்டும்'' என்று, திருப்பூர் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

நாடு முழுவதும் உள்ள குறு, சிறு நிறுவனங்கள், தொழில்ரீதியாக செய்யும் பணிகளுக்கான சேவை கட்டணம் பெறுவது, குதிரை கொம்பாக இருக்கிறது. உற்பத்தி சேவையாக இருந்தாலும் சரி; சில்லரை விற்பனையாக இருந்தாலும் சரி; மூன்று மாதங்களுக்கு மேல் நிலுவை வைத்து கட்டணத்தை செலுத்தும் நிலை இருந்து வந்தது.

மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்றி, குறு, சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் எனற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. அதை பரிசீலித்த மத்திய அரசு, 2023ம் ஆண்டு இறுதியில், வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்து, 45 நாட்களுக்குள் கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

45 நாளில் 'பேமென்ட்' 'ஜாப் ஒர்க்' முறையில் செய்யப்படும் சேவைப்பணிக்கான கட்டணத்தை, 'பில்' வழங்கியதில் இருந்து, 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிடில், செலுத்த வேண்டிய கட்டண தொகையை, செலவு கணக்காக காட்ட இயலாது. கொடுக்க வேண்டியை நிலுவையை வருவாயாக கருதி, வரி விதிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

அதற்காக, வருமானவரி சட்டம் பிரிவு 43 பி(எச்) திருத்தம் செய்யப்பட்டது. முழுமையாக, இரண்டு நிதியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், அரசு சட்டம் இயற்றியும் கூட, 45 நாளில் 'பேமென்ட்' என்ற உத்தரவு திருப்பூரில் முழுமையாக அமலுக்கு வரவில்லை.

அரசுக்கு கடிதம் அமெரிக்க ஆர்டர் வரத்து, கடந்த நான்கு மாதங்களாக மந்தமாகியுள்ளதால், திருப்பூரில் இயங்கும் நிட்டிங், சாய ஆலைகள், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங், நிட்பிரின்டர்ஸ், காம்பாக்டிங் என, அனைத்து நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, 45 நாளில் 'பேமென்ட்' சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இத்தகைய புகார்களை விசாரிக்க, தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அபராதம் விதிக்கலாம் 'லகு உத்யோக் பாரதி' அமைப்பினர் கூறுகையில், 'குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பாதுகாப்புக்காக, 45 நாட்களில், பேமென்ட் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவை வியாபாரிகளுக்கும் அமலாக்க வேண்டும். குறு, சிறு நிறுவனங்களுக்கு, உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாக புகார் வருகிறது.

வருமானவரி சட்ட திருத்தம் வாயிலாக, 45 நாட்களில் பேமென்ட் கொடுக்காவிடில், அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கடுமையாக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us