/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டுமனை பட்டா பெறுவதில் சிக்கல்
/
வீட்டுமனை பட்டா பெறுவதில் சிக்கல்
ADDED : ஜூலை 14, 2025 11:45 PM

அவிநாசி; அவிநாசியிலுள்ள மா.கம்யூ., அலுவலகத்தில், 'டொம்பர்' சமுதாய மக்களுக்கு சாதி சான்று, வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்டங்கள் பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், அவிநாசி பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கட்டட சங்க செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஊத்துக்குளி பெரியசாமி தலைமையில், சாதி சான்று பெறுவது, பள்ளி கல்லுாரிகளில் சேர்வது, பட்டா விண்ணப்பிப்பது மற்றும் அரசு நலத்திட்டங்கள் பெறுவது குறித்த கருத்துக்கள் மக்களுக்கு விளக்க முடிவு செய்யப்பட்டது. கருப்புசாமி நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில், 28ம் தேதி இலவச பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பது, திரளான மக்களையும் திரட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி சாதி சான்றிதழ் உள்ளிட்ட பிரச்னைகளை குறித்து பேசுவது, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தில் இணைந்து செயல்படுவது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.