/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய விளையாட்டில் மாணவர்கள் பங்கேற்பதில் சிக்கல்! தேர்ச்சி விகிதத்தை காரணங்காட்டி முட்டுக்கட்டை?
/
குறுமைய விளையாட்டில் மாணவர்கள் பங்கேற்பதில் சிக்கல்! தேர்ச்சி விகிதத்தை காரணங்காட்டி முட்டுக்கட்டை?
குறுமைய விளையாட்டில் மாணவர்கள் பங்கேற்பதில் சிக்கல்! தேர்ச்சி விகிதத்தை காரணங்காட்டி முட்டுக்கட்டை?
குறுமைய விளையாட்டில் மாணவர்கள் பங்கேற்பதில் சிக்கல்! தேர்ச்சி விகிதத்தை காரணங்காட்டி முட்டுக்கட்டை?
ADDED : ஜூலை 24, 2025 11:33 PM
திருப்பூர்; விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் மாணவ, மாணவியருக்கு அத்துறையில் எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலேயே, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், 'பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், இந்த விளையாட்டு போட்டிகளில் மாணவர்களை பங்கேற் க செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை' என்ற ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது.
வீணாகும் நோக்கம்! உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது;
விளையாட்டு திறமையுள்ள மாணவ, மாணவியர், 6ம் வகுப்பு முதல் உரிய பயிற்சி பெற்று, ஆண்டுதோறும் நடக்கும் குறுமைய மற்றும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து இரு ஆண்டுகள் பயிற்சி பெற்று திறமையை வளர்த்து, 17 மற்றும் 19 வயதுக்குட்டேர் பிரிவில் விளையாட தகுதி பெறும் போது, அவர்கள், 9 முதல், 12ம் வகுப்பில் பயில்வர்.அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும், 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி, பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். மாறாக, குறுமைய விளையாட்டு போட்டிக்கு மாணவர்களை அனுப்ப மறுக்கின்றனர்.
பள்ளி வேலை நேரம் தடைபடாமல், மாலை நேரங்களில் மாணவர்களுக்கு பயற்சி வழங்க முற்பட்டாலும், சிறப்பு வகுப்பு வைத்து, அவர்களை பயிற்சிக்கு அனுப்ப அனுமதி மறுக்கின்றனர். இதனால், குறுமைய விளையாட்டு போட்டிகளின் பலன் மாணவர்களை சென்றடைவதில்லை.
அதோடு, குறுமைய விளையாட்டுப் போட்டியில் நடுவர், ஸ்கோரர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. 2 உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் ஒரு ஆசிரியரை மட்டுமே, குறுமைய போட்டிகளில் நடுவர் பணியாற்ற பள்ளி தலைமையாசிரியர்கள் அனுமதிக்கின்றனர்.
பெரும்பாலான பள்ளிகளில், ஒரு உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர்களை குறு மைய போட்டிகளை நடத்தும் பணிக்கு அனுப்ப, பள்ளி தலைமையாசிரியர்கள் அனுமதிப்பது இல்லை.
உத்தரவு அவசியம்! அடுத்த மாதம் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கவுள்ள நிலையிலும், இதே நிலை தான் தொடரும். எனவே, விளையாட்டு திறமை மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை கட்டாயம், போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்க வேண்டும்; ஒவ்வொரு பள்ளிகளில் இருந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அறிக்கையாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவை, கல்வித்துறை பிறப்பித்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.