தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 100 சிலைகளுடன் அவிநாசியில் ஊர்வலம்

100 சிலைகளுடன் அவிநாசியில் ஊர்வலம்

100 சிலைகளுடன் அவிநாசியில் ஊர்வலம்


ADDED : செப் 16, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி, செப்.17–

அவிநாசியில் ஹிந்து முன்னணி சார்பில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி அவிநாசி, சேவூர், திருமுருகன்பூண்டி, கருவலூர், தெக்கலூர், கணியாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. சிலைகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மூன்றாம் நாளான நேற்று, அந்தந்த பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் அவிநாசி– சேவூர் ரோட்டில் உள்ள வ.உ.சி திடலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பேரரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஹிந்து முன்ணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து ஈஸ்வரன் கொடியசைத்து விசர்ஜன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

வ.உ.சி. திடலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கச்சேரி வீதி, வடக்கு மற்றும் கிழக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதுார், புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நிறைவடைந்தது. பின்னர் சிலைகள் சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சங்கர், கார்த்திகேயன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஊர்வலத்தையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us