sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் ஏலம்; தேங்காய் கிலோ ரூ.57.11க்கு விற்பனை

/

 விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் ஏலம்; தேங்காய் கிலோ ரூ.57.11க்கு விற்பனை

 விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் ஏலம்; தேங்காய் கிலோ ரூ.57.11க்கு விற்பனை

 விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் ஏலம்; தேங்காய் கிலோ ரூ.57.11க்கு விற்பனை


ADDED : பிப் 18, 2026 06:46 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ.57.11க்கும், கொப்பரை ஏலத்தில், கிலோ ரூ.200க்கும் விற்பனையானது.

மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.

நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, 874 கிலோ எடையுள்ள, 2,200 தேங்காய்களை, 7 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில்,6 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ.57.11க்கும், குறைந்த பட்சமாக, ரூ.53 என சராசரியாக, ரூ.54க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 47 ஆயிரத்து, 607 ஆகும்.

அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 26 விவசாயிகள், 55 மூட்டை அளவுள்ள, 1,744 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர். இதில், 6 வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக, கிலோ ரூ.200க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.155 என, சராசரியாக, ரூ.174க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 2 லட்சத்து, 83 ஆயிரத்து, 412 ஆகும்.

மேலும், 20 மூட்டை அளவுள்ள, 390 கிலோ, தேங்காய் தொட்டியை, 7 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இ-நாம் ஏலத்தில், 6 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் தொட்டி, ரூ.28.59க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ரூ.11 ஆயிரத்து, 143 ஆகும், என ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us