/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் விளை பொருள் ஏலம் ரூ. 34.41 லட்சம் மதிப்பில் விற்பனை
/
விற்பனை கூடத்தில் விளை பொருள் ஏலம் ரூ. 34.41 லட்சம் மதிப்பில் விற்பனை
விற்பனை கூடத்தில் விளை பொருள் ஏலம் ரூ. 34.41 லட்சம் மதிப்பில் விற்பனை
விற்பனை கூடத்தில் விளை பொருள் ஏலம் ரூ. 34.41 லட்சம் மதிப்பில் விற்பனை
ADDED : ஜன 28, 2025 05:14 AM
உடுமலை: உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், ரூ. 34.41 லட்சம் மதிப்பிலான, மக்காச்சோளம், கொப்பரை ஏலம் நடந்தது.
உடுமலை அருகேயுள்ள பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சுற்றுப்புற விவசாயிகள், விளை பொருட்களை கொண்டு வந்து, இ-நாம் திட்டத்தின் கீழ், விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு, ரூ. 2.86 லட்சம் மதிப்பிலான, 124.34 குவிண்டால் மக்காச்சோளம், தேசிய வேளாண் சந்தை வாயிலாக ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது.
அதே போல், ரூ. 31.55 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 222.35 குவிண்டால், கொப்பரை, இ-நாம் திட்டத்தில் விற்பனையானது. இதில், 6 விவசாயிகள் மற்றும் 20 வியாபாரிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், விற்பனை கூட கண்காணிப்பாளர் ராமன் ஆகியோர் கூறியதாவது:
பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், மக்காச்சோளம், கொப்பரை உள்ளிட்ட விவசாய விளை பொருட்கள், இ-நாம் திட்டத்தின் கீழ், ஏலம் நடந்து வருகிறது.
தேசிய அளவிலான ஏல முறையில், ஏராளமான வியாபாரிகள், நிறுவனங்கள் பங்கேற்பதால், விவசாய விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்குரிய தொகை, விவசாயிகள் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்தப்படுகிறது.
எனவே, பெதப்பம்பட்டி சுற்றுப்புற விவசாயிகள், ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர் களங்கள், குடோன் வசதி மற்றும் இ-நாம் திட்டத்தில் விளை பொருட்கள் ஆகிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.